சிஷ்யர் : பொம்பளைங்க புரிஞ்சுக்கவே மறுக்கிறாங்க... ஏன் இப்படி ?
பித்ஸ் : அது சரி
சிஷ்யர் : அப்படின்னா? என்னாது அது சரி, அது சரி!
சுவவமிஜி அப்படிச் சொல்லி நலுவிக் கொள்ளலாமா?
பித்ஸ் : நமக்கு உலகத்துல வீடு ஒரு பகுதி, அவங்களுக்கு உலகமே வீடுதான்
சிஷ்யர் : சரி அதிலிருந்து நான் என்ன குருஜி எடுத்துக்கிறது, நீங்க சொல்றது சரின்னுதான் படுது... ஆனா
பித்ஸ் : நம்ம உலகை நம்மகிட்டேர்ந்து அவங்க பறிக்காதப்போ அவங்க உலகை நாம அவங்ககிட்ட இருந்து பறிக்கக் கூடாது
சிஷ்யர்: அங்கே இருக்கும் குழப்பங்களை உங்கள் உலகத்தின் ஊடே வைத்து... சிதைக்கும் பொழுது
எப்படி நாம் அதனை கையாள்வது?
பித்ஸ் : நம் உலகத்தோட ஒப்பிடும்போது அவங்க உலகம் மிகச் சிறியது
அது மாதிரிதான் அந்த குழப்பங்களும் அவர்களுக்கு பெரியது, நமக்கோ ஜுஜுபி
சிஷ்யர் : ஹா ஹா ஹா,
அய்யா தெளிவுறுகிற மாதிரி இருக்கிறது நெருங்கிவிட்டீர்கள், என் பிணக்குகளை தீர்க்கும்
வண்ணம் தொடருங்கள் தொடருங்கள், நிறுத்தாதீர்கள்
பித்ஸ் : நீ
நீயாக இரு!
நான்
நானாக
இருக்கிறேன்!
நாம்
நாமாகவே
இருப்போம்!
இவர்கள்
இவர்களாகவே
இருக்கட்டும்!
அவர்கள்
அவர்களாகவே
இருக்கட்டும்!
நீ
நானாக வேண்டாம்!
நான்
நீயாக வேண்டாம்!
நாம்
நாமாகவே
இருப்போம்!
எவரோ
எவராகவோ
இருக்கட்டும்!
நமக்கென்ன?
ஒரு
குழப்பமும்
இல்லை!
நீ
நானாகவும்
நான்
நீயாகவும்
மாற எண்ணாதவரை!
சிஷ்யர்: அந்த குழப்பங்களின் ஊடாக, உறவு முறைகள் பிரிவதற்கு சாத்தியங்கள் அதிகமிருக்கும் பட்சத்தில் எப்படி அணுகுவது? வெறுமனே வேடிக்கைப் பார்த்தால் சரியாகி விடுமா?
பித்ஸ்: உறவு முறைகள் எப்படி உனக்கே உனக்கென்று வாய்த்ததென்னு எண்ணுகிறாய்?
உம்மோடு பிணக்கு என்றால் அது எல்லோரோடும் பிணக்கு அல்ல
சிஷ்யர்: உறவு முறைகள் என்பது, பொற்றொர்கள், சகோதரர்களின் ஊடாக வைத்து திணிக்கப்படும் ஐயப்பாடுகள்,., இதில் அடக்கம்
பித்ஸ்: நல்லது. யார் உம்முடன் எப்பொழுதும் இருப்பவர்கள்?
சிஷ்யர்: ஹும் ஒரு வயதிற்கு பிறகு மனைவியே கூட இருக்கப் போகிறாள்... அதனால்...
பித்ஸ்: அவர்களுக்கு வருத்தம் என்று நீ வருந்துகிறாய்! உனக்கு வருத்தம் என்று அவர்கள் வருந்துவதை நீ உணர்ந்ததுண்டா?
சிஷ்யர்: உணர வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் உணர்ந்திருக்கிறேன்...
ஆனால், ஒருவனுக்கு எவ்வளவுதான் வலியென்றாலும்
பித்ஸ்: அது உன்மையெனில் உங்களுக்குள் குழப்பம்/பிணக்கு எங்கிருந்து வந்தது
சிஷ்யர்: வலியால் பீடிக்கப்பட்டவனே முழுமையாக அந்த வலியை ஏற்க வேண்டுமல்லாவா
பித்ஸ்: ஆமாம். அந்த வலியை நீ வெளிக் காட்டலாம். அல்லது உனக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம். எது நல்லதென்று தோன்றுகிறதோ அப்படியே
சிஷ்யர் : அது உன்மையெனில் உங்களுக்குள் குழப்பம்/பிணக்கு எங்கிருந்து வந்தது<==== இதற்கு அடிப்படை அகங்காரமும், அதீத எதிர்பார்பும் தானோ
பித்ஸ் : உண்மை
சிஷ்யர் : எப்படித்தான் அகங்காரம் குண்றியாவனாக இருந்தாலும்
பித்ஸ்: அளவற்ற அன்பு - உரிமை - எதிர்பார்ப்பு
எதிர்பாப்பு அகல வேண்டுமானால் உரிமை அகல வேண்டும்
உரிமை அகல பற்றறுத்தல் வேண்டும்
சிஷ்யர் : ஒரு மண்புழுவை விடாது குத்திப் பார்க்கும் பட்சத்தில் மண்புழு தன்னை ஒரு பாம்பாக நினைத்து சீறும் நிலை ஏற்படுகிறதே
பித்ஸ் : தவறில்லை
சிஷ்யர்: ஹும்
பித்ஸ்: அந்த பற்றற்றிருக்கும் நிலையை வெளியில் காட்டத் தேவை இல்லை அது பிறரை வதைக்கும்
சிஷ்யர் : ஓ!
பித்ஸ் : சொற்கள் உன்னை குத்துகின்றன என்பது உன் மனநிலையையே பொறுத்தது
மிகவும் நெருங்கியவர் உம்மை சொற்களால் வதைக்கிறார் என்பது
அதே சொற்கள் பிறரால் சொல்லப் படும்போதும் உம்மை வதைக்குமா என்று பார்க்க வேண்டும்
சிஷ்யர் : அட ஆமா... அது பொருளற்றதாக அல்லாவ தோன்றும்....
பித்ஸ்: அதே! பற்றற்ற நிலையில் உள்ளவர்களுக்கு எல்லோரும் ஒன்றே!
பிறரின் சொற்கள் வதைப்பதில்லை அல்லது அவர்கள் பொருட்படுத்துவதில்லை
சிஷ்யர் : இது சாத்தியப் படுமா... கணவன் மனைவிக்கிடையிலும் கூட....??? ஆச்சர்யமாக இருக்கிறது, இதனை பல முறை நான் முயன்றும் தோற்றுப் போயி உள்ளேன்
பித்ஸ் : சிறிது கடினம்தான். ஆனால் சாத்தியமே! கணவன் என்பது கடவுள் கொடுத்த பணி/கடமை எண்று எண்ணும்போது
சிஷ்யர் : அப்படி, பற்றற்ற நிலையில் இருக்கிறேன் என்பது சட்டை செய்யாமல் யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனப் பிறழ்ச்சியைல்லாவா கொடுத்து விடுகிறது...
பித்ஸ் : யார் எக்கேடு கெட்டு போகிறார்கள் என்று விட்டுச் செல்வது சந்நியாசம்
சிஷ்யர்: அப்படி இல்லறத்தில் செய்தும் துணைவியார் தன்னை சுடு சொல்லோ அல்லது வுமது இல்லறத்துக்கு ஒவ்வாத "சுயநலவாதத்தை" பிரயோகப் படுத்தும் பொழுது
பித்ஸ் : தனக்குரிய கடமைகளை தனக்கு எது நேர்ந்தாலும், தன்னைப் பாதிக்காமல் அல்லல்களிடமிருந்து ஒதுங்கி நின்று அவற்றை வேடிக்கைப் பார்த்தவாறே நிறைவேற்ற வேண்டும்
சிஷ்யர்: எப்படி பற்றற்றவனாக வேடிக்கை பார்க்க முடியும்... அதில் நானும் ஒரு கூட்டு களவானித்தனம் பண்ணுவது போல இருந்தாலும்...
பித்ஸ்: அவைகளை அவர் தனது கணவருக்குச் சொல்கிறார் என்று மூன்றாவது நபராக நின்று வேடிக்கை பார்க்கலாம், அதாவது அந்த கணவன் என்ற கதாபாத்திரத்திற்கு சொல்லப்படுபவை என்று
சிஷ்யர்: ஓ! ஆனால், வெளியில் நின்று அதனால் பாதிக்கப்பட்டவர் எப்படி எடுத்துக் கொள்வார் இந்த உடம்புடன் அலையும் கணவனை
பித்ஸ் : வெளியில் நிற்பவர் பாதிக்கப் படக் கூடாது ஒருபோதும்
சிஷ்யர் : ஆகிறாரே
பித்ஸ்: ஏனெனில் அதுதான் நாம்
சிஷ்யர் : இங்குதானே ப்ரச்சினையே... பொற்றோர்களை உதாசீனப் படுத்துவது, சொந்த சகோதரனை ப்ரியச் சொல்லி நிர்பந்திப்பது இப்படி
பித்ஸ் : பாதிக்கப் படுகிறார் என்றால் அவர் எதோ ஒன்றிற்கு கட்டுப் படுகிறார் என்று பொருள்
சிஷ்யர் : புரியவில்லையே சுவாமி!
பித்ஸ் : பாதிக்கப் படுகிறார் என்றால் அவர் எதோ ஒன்றின் மேல் பற்றோடு இருக்கிறார் என்று பொருள்
சிஷ்யர் : இதனை எப்படி... அவள் தனது கணவனுக்கு இடும் கட்டளை என நினைத்து கடமையாற்ற முடியும், சுவாமி
பித்ஸ்: கானவனுக்கு/மகனுக்கு/அண்ணனுக்கு உரிய கடமைகளை ஆற்றத்தான் வேண்டும்
சிஷ்யர்: பெண்கள் தனது குடும்பம், தனது கணவன், தனது பிள்ளைகள் என்று இருக்கிறார்களே!
பித்ஸ்: பெண்கள் அப்படித்தான் இருப்பர், அது அவர்கள் கடமை! உரிமை!
நாம் இரண்டாகப் பிரிந்து கொள்ள வேண்டும்
எவ்வித நிகழ்வுகளும் நம்மை பாதிக்காத வகையில்
மனதை அப்புறப் படுத்த வேண்டும்
சிஷ்யர் : சரி, இதுதான் சூழ்நிலை எடுக்கும் முடிவுகள் நேரடியாக பொற்றோர்களையும், சாகோதரர்களையும் பாதிக்கப் போகிறது ஆனால்
துணைவியாரை சந்தோஷப் படுத்தப் போகிறது, இக்கணத்திற்கு
எந்தப் பக்கம் சாயவேண்டும்?
பித்ஸ் : அந்தக் கணத்தில் எது சரியெனத் தோன்றுகிறதோ அப்படி!
அதனால் எவரேனும் ஒருவர் பாதிக்கப் படுவர் என்பது உண்மைதான்
சிஷ்யர் : பின் விளைவுகள்???
பித்ஸ் : ஆனால் அதனால்தான் சொல்கிறேன் வெளியே வந்துவிட வேண்டும் ஏண்று
சிஷ்யர் : ஆதங்கப்பட்டு பொற்றொர்கள் மாண்டு விட்டனர்...
உண்மையான தன் மகனின் பாசத்தை புரிந்து கொள்ள முடியாமல்
பித்ஸ்: ஒருவரால் எல்லா நேரமும் எல்லார்க்கும் நல்லவராக இருக்க முடியாது
சிஷ்யர்: சகோதரர்கள் நேரத்திற்கு உதவா பாசம் எதற்கு பின்னால்... என்று மன முறிந்து போகின்றனர்
பித்ஸ்: உண்மையாகப் புரிந்து கொண்டவர்களாக இருப்பின் உமது சூழ்நிலையையும் புரிந்து கொள்வர்
சிஷ்யர்: நாம் துணைவியார் பின்னால் தனது புரிந்துணரும் வயதில் வந்து நினைத்து வருந்தினாலும்... அது நேரத்திற்கு எட்டாத ஒரு புரிந்துணர்வு அல்லவா... அது எதுக்கு பிரயோசனம்??
பித்ஸ்: நீர் புரிந்து கொள்ளல் அல்ல! உம்மை மற்றவர்கள் புரிந்து கொள்வது பற்றி சொல்கிறேன்
சிஷ்யர் : "உண்மையாகப் புரிந்து கொண்டவர்களாக இருப்பின் உமது சூழ்நிலையையும் புரிந்து கொள்வர்" இது ரொம்பத் தெம்பான வார்த்தை
பித்ஸ் : உம்மை பிறர் புரிந்து கொள்ளாமல் உம்மை சொற்களால் தாக்கினால் நீ வருந்தக் கூடாது
சிஷ்யர் : ஹும், சூப்பர்ப், அருமை. அருமை நன்றி சுவாமி!
This entry was posted on 1:27 PM and is filed under
உரையாடல்
,
போதனை
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
10 comments:
உபத்தின் உபவாய உபத்தேய உபகார சிப்ஸ்காரம் என்ற உபதேசத்தை இவ்வளவு அழகா விரிச்சி யாரும் சொன்னதில்லை.
க்காகோக்காகாகககாகீக்கோகா....இது பறவை பாஷை. ஒங்கள வாழ்த்துறேன். வாங்கிக்கோங்க.
இது யாரோ எனக்கு தெரிஞ்ச ரெண்டு பேரு பேசிக்கிட்ட மாதிரியில்ல இருக்கு :-))
க்காகோக்காகாகககாகீக்கோகா....இது பறவை பாஷை. ஒங்கள வாழ்த்துறேன். வாங்கிக்கோங்க. //
:-))) That was so funny... that bird's note :-PP
அடப் பாவிகளா ரெண்டுபேரும் விடிய விடிய சாட்டிங்க் பன்னது போக அத பதிவா வேற போட்டு தாக்குறீங்களேய்ய்யா என்ன கொடுமை
//அடப் பாவிகளா ரெண்டுபேரும் விடிய விடிய சாட்டிங்க் பன்னது போக அத பதிவா வேற போட்டு தாக்குறீங்களேய்ய்யா என்ன கொடுமை //
குழந்தாய்!
யாரப்பா நீ?
Gooood! Cooool!
ஸ்வாமிகளே ஒரு சின்ன சந்தேகம்
புரிஞ்சதால பிரச்னையா ? இல்ல புரியாததால பிரக்னையா?
புரிஞ்சும் புரியாம நடக்கறதால பிரச்னையா? இல்ல புரியாம புரிஞ்ச மாதிரி நடக்கறதால பிரச்னையா?
புரிஞ்சும் புரியாத மாதிரி நடக்கனுமா? இல்ல புரியாமயே புரிஞ்சா மாதிரி நடக்கனுமா?
புரிஞ்சும் புரியாம நான் கேட்கறேன். தெரியாம தெரிஞ்ச மாதிரி பதில் சொல்லுங்க ஸ்வாமிகளே :)
பித்தானந்தாஜி..
இப்ப எங்களுக்கு தான் பித்தம் தலைக்கு ஏறின மாதிரி இருக்கே...
கடைசியில என்ன சொல்ல வாரீக..
intha urayadal really super...
பிறவிப்பெரும்பயன் அடைந்தேன் ஸ்வாமிஜி...
ஆஸ்ரமம் அமைக்கும்போது இந்த சிறுவனையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.