002 : இன்பமும், துன்பமும்
10:35 AM | Author: பித்தானந்தா
சிஷ்யன் : "துன்பம் என்பது என்ன?

பித்ஸ் : "உன் சிரிப்பை இழக்க வைக்கும் நிகழ்வு"

சிஷ்யன் : "சிரிப்பை எதனால் இழக்கிறோம்?"

பித்ஸ் : " இழப்பதற்கு நம்மிடம் எல்லாம் இருக்கிறது என்ற நினைப்பால்"

சிஷ்யன் : "புரியவில்லையே!"

பித்ஸ் : "இங்கு தன் கண்ணெதிரே இருப்பவை அனைத்தும் தனக்கே உரியது என்ற எண்ணம்"

சிஷ்யன் : "அவரவர்க்குச் சொந்தமானது அவரவர்க்கு உரியவைதானே!"

பித்ஸ் : "அது சரி! இந்த சரீரம் உனக்கு உரியதா?"

சிஷ்யன் : "ஆம்! எனது உடல்தானே இது"

பித்ஸ் : "மரணத்தை தழுவிய உடன் இவ்வுடலையும் கொண்டு செல்வாயா, உம்மிடம்"

சிஷ்யன்: "இல்லை! அது முடியாதே!"

பித்ஸ் : "கணப் பொழுதும் உன்னை விட்டகலா உடலையே உன்னால் எடுத்துச் செல்ல இயலாதபோது மற்றவை எப்படிச் சொந்தமாகும் மானிடர்க்கு?"

சிஷ்யன் : "அப்படியெனில் உள்ள உயிரில்லாப் பொருட்களுக்கும் எவரேனும் பொறுப்பேற்க வேண்டி இருக்கிறதே!"

பித்ஸ் : "கொடுக்கப் படுவது பொறுப்பு மட்டுமே. உரிமை அல்ல என்றுணர்ந்தால் துன்பங்கள் நிகழாது"

சிஷ்யன் : "துன்பங்கள் நிகழா விடில் வாழ்வில் சலிப்ப்த் தோன்றாதா?"

பித்ஸ் : "இன்பமும் துன்பமும் ஒன்றெனப் பாவிப்போர்க்கு அப்படித் தோன்றாது!"

சிஷ்யன் : "இன்பமும் துன்பமும் ஒன்றாவது எப்படி?"

பித்ஸ் : "எப்போதெல்லாம் உனக்கு இன்பம் கிடைக்கிறது?"

சிஷ்யன் : "எப்பொழுதெல்லாம் புதிதாய் ஒரு பொருளோ, பணமோ எனக்குச் சொந்தமாகும்போது, கவலைகள் மறக்கும் வண்ணம் நிகழ்வுகள் நிகழும்பொழுது"

பித்ஸ் : "கவலைகள் மறக்கத்தான் படுகின்றன. தீர்க்கப் படுவதில்லை என்பது தெரிகிறதா"

சிஷ்யன் : "ஆமாம்"

பித்ஸ் :" புதிதாய் சிலபொருட்கள் உனக்குச் சொந்தமாகும்போது மகிழும் நீ அவற்றை இழக்கும்போது என்ன ஆகிறாய்?"

சிஷ்யன் : "கவலையுறுகிறேன்"

பித்ஸ்: "ஆக கிடைத்தபோது இன்பம், இழக்கும் போது துன்பம், அப்படித்தானே?"

சிஷ்யன்: "ஆம்"

பித்ஸ் : "துன்பத்தின் தொடக்கம் இன்பமென்று இதிலிருந்து தெரிகிறதா?"

சிஷ்யன் : "ஆம்!"

பித்ஸ் : "ஆனால் இரண்டையும் ஒன்றாய்க் கருதுவோர், அப்படி இருப்பதில்லை. தமக்கெனக் கிடைப்பனவற்றை தன்னிடம் கொடுக்கப் பட்ட கடமையென்றே எண்ணுகின்றனர். தனக்கே சொந்தமென மடமையாய் எண்ணுவதில்லை"

சிஷ்யன் : "ஆஹா! புரிகிறது. மிக்க நன்றி"
This entry was posted on 10:35 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On July 27, 2007 at 11:11 AM , G3 said...

avvvvvvvv.. piths asatharaaru :))

 
On July 27, 2007 at 11:26 AM , Santhosh said...

ஏன் சிபி ஏன் இப்படி.. எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது.. பாவம் இல்லையா நாங்க?

 
On July 27, 2007 at 11:27 AM , பித்தானந்தா said...

//ஏன் சிபி ஏன் இப்படி.. எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது.. பாவம் இல்லையா நாங்க?//

மற்ற பதிவுகளைப் படித்து விட்டு இன்புறும்போது இந்தப் பதிவுகளைப் படித்து துன்பம் கொள்வது இயற்கைதானே சந்தோஷ்!

 
On July 27, 2007 at 8:36 PM , கப்பி | Kappi said...

டொண்ட டொண்ட.. டொண்ட டொய்ங்...டொடடடொய்ங்..
(நாயகன் மூஜிக் தான் :)))

 
On July 28, 2007 at 2:57 AM , G.Ragavan said...

அட்டடா! அட்டடட்டா! எப்படி இப்பிடி!

ஆகா துன்பத்துக்குள்ள இன்பமும் இன்பத்துக்குள்ள துன்பமும் உக்காந்துக்கிட்டிருக்குன்னு சொல்றீங்க. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லைன்னுதான சொல்ல வர்ரீங்க.

 
On July 28, 2007 at 3:20 AM , அனுசுயா said...

//கவலைகள் மறக்கத்தான் படுகின்றன. தீர்க்கப் படுவதில்லை என்பது தெரிகிறதா//

நிஜமான தத்துவம். வர வர பித்தானந்தா நல்ல தத்துவானந்தாவா மாறிட்டு வராரு ம்ம்ம :)

 
On July 28, 2007 at 4:35 AM , அபி அப்பா said...

சிபி! பித்தானந்தா ஏதோ பித்துகுளி தனமா இருக்கும்ன்னு இத்தன நாள் நான் நெனச்சேன். இது தான் முதல் வருகை.

நீங்க சொல்வது நெஜம். நான் அப்படியே தான், துன்பம் இன்பம் இரண்டும் எனக்கு ஒன்னு தான்! அப்படித்தான் ட்ரீட் பண்ணுவேன்! சூப்பர் பித்தானந்தா!

 
On July 29, 2007 at 5:17 AM , குசும்பன் said...

குருவே சரணம், குருவடியே சரணம்.
இன்று முதல் நான் உங்கள் சிஷ்யன் சுவாமி... சிஷ்யைகள் எங்க இருக்காங்க?

 
On July 29, 2007 at 5:45 AM , Thekkikattan|தெகா said...

இட்லிக்கு, பொடி இல்லாமல் சாப்பிட்டா நன்றாக இருக்குமா? இல்லை, அப்படியே சாப்பிட்டாலும் அதன் முழுச் சுவையையும்தான் அறிய முடியுமா? எனவே, இட்லிக்கு எப்படி இட்லிப் பொடியோ அது போலவே வாழ்க்கையென்றால், இன்பமில்லாமல் துன்பமமில்லை, துன்பமில்லாமல் இன்பமில்லை - ஒன்றிருந்தால் தான் மற்றென்றின் சுவையறிவோம், இல்லையா பித்ஸ் குருஷி!!

 
On July 29, 2007 at 8:04 AM , Anonymous said...

பித்தானாந்தா நம்பளைப் பித்து புடிக்கமால் விட மாட்டார் போல இருக்கே!!!!

 
On September 10, 2007 at 12:57 AM , Ungalranga said...

ungalin vayathu ungalin arivu
appapa abaram pinnteengo...wow
its really super...


ippadilam sollamnu patha ore thathuvama pottu konuteenga...
yappa mudiyala....

 
On November 18, 2007 at 3:52 AM , நானானி said...

ஆஹா..கெளம்பீட்டாங்கய்யா..
எல்லோரும் இப்படி தத்துவமழை பொழிந்தால் எங்களுக்கு ஜல்ப் பிடிச்சிராது?

 
On February 4, 2009 at 3:35 AM , Anonymous said...

its really super pa...varthaigal illa itha pathi solla i like it......

 
On May 15, 2011 at 8:45 AM , Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

நல்ல பதிவு, பாரட்டுக்கள் வாழ்க வளமுடன்