சிரி
9:51 AM | Author: பித்தானந்தா
சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!

சிரிப்பு ஓர்
சிறந்த வரம்!
மானுடப் பிறவிக்கு!

கவலைகள் அதிகமா!
கவலைப் படாதே!
சிரிக்கப் பழகு!

துன்பங்கள் வரும்போதும்
துவளாமல் சிரி!
உள்ளத்து விசனங்களை
வெளியிலே எறி!

சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!

தினமும் சில நிமிடம்
சிரிக்கும் நேரம் அதிகமாக்கு!
அதுவே பாதிச் சுமை
உன்னிடத்தில் குறைக்கும்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்!
தேஜஸ் கண்டு
உன் பின்னே கூட்டம்
வரக் கூடும்!

திரும்பிப் பார்!
அவர்களும் திரும்பிடுவர்!
அச்சத்தில் அல்ல!
உன் தேஜஸ்
கண்டு தடுமாறுவர்!

சிலர் உன்மேல்
கல்லெறியக் கூடும்!
உன்னைப் போல்
கவலையின்றி இருக்க
இயலாமையின் பொறாமை!

மனதார மன்னித்து விடு!
அவர்களையும்
பார்த்துச் சிரி!
புரிந்தாலும் ஒதுங்கிக் கொள்வர்!
புரியாவிட்டாலும் கூட!

இப்படியே
சில நாள் பயிற்சியில்
சிரிப்பு உனக்கு
கை கைகூடிவிடும்!
உன் பொறுப்புகளும்
வாழ்க்கைச் சுமையும்
உன்னை
தொந்தரவு செய்யாது!

சுதந்திரமாக உணர்வாய் நீ!
இப்போது இன்னும்
அதிக நேரம் சிரிக்கலாம் நீ!

அப்புறமென்ன
வந்துவிடு எங்களுடன்!
சேர்ந்து சிரிப்போம்!

நீ மறுத்தாலும்
நாங்கள்
காத்துக் கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!

- சுவாமி பித்தானந்தா,
கீழ்ப்பாக்கம்.

சிஷ்யன் :குருவே.. எப்படி என்னை நான் அறிவது...?


குரு :
"உனக்கு...
உன்னை தெரிந்திருந்தால்..
உனக்கு நீ எதிரியில்லை உனக்கு..
உனக்கு
உன்னை தெரியாவிடில்..
உனக்கு நீ நண்பனுமில்லை உனக்கு..
உனக்கு...
உன்னை முழுதுமாய்
உனக்கு உன்னை தெரிவித்தல்..
உனக்கு உன்னை அறிவித்தல்..
உனக்கு உன்னை காட்டுதல்..
உன் வேலையாகும் போதுதான்...
உனக்கு உன்னைப் பற்றி
உனக்கே தெரியவரும்....!!! "

குரு : புரிகிறதா சிஷ்யா.................??
சிஷ்யன் : ............ . . . .
க....வி....தை...!!!
2:55 AM | Author: Ungalranga
என் மனம் உன்னை சேர்ந்ததால்...
என் உயிர் உன்னையே தொடர்வதால்...



இறைவா...



நீயே சொல்லிவிடு...
எது வரை நீளபோகிறது உன் மௌனம்....
அதுவரை காத்திருக்குமா என் மரணம்...?





டிஸ்கி:இத "நான்" எழுதல... வேற "யார்" எழுதி இருப்பா ??
என்ன சொல்ல...??
12:37 AM | Author: Ungalranga
....ம்


... இல்ல அது சரியா இருக்காது...

..இது போருப்பா...

... சரி....


... ம் இதுதான் சரி...



...ம்ம்ம்ம்.............