சிரி
9:51 AM | Author: பித்தானந்தா
சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!

சிரிப்பு ஓர்
சிறந்த வரம்!
மானுடப் பிறவிக்கு!

கவலைகள் அதிகமா!
கவலைப் படாதே!
சிரிக்கப் பழகு!

துன்பங்கள் வரும்போதும்
துவளாமல் சிரி!
உள்ளத்து விசனங்களை
வெளியிலே எறி!

சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!

தினமும் சில நிமிடம்
சிரிக்கும் நேரம் அதிகமாக்கு!
அதுவே பாதிச் சுமை
உன்னிடத்தில் குறைக்கும்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்!
தேஜஸ் கண்டு
உன் பின்னே கூட்டம்
வரக் கூடும்!

திரும்பிப் பார்!
அவர்களும் திரும்பிடுவர்!
அச்சத்தில் அல்ல!
உன் தேஜஸ்
கண்டு தடுமாறுவர்!

சிலர் உன்மேல்
கல்லெறியக் கூடும்!
உன்னைப் போல்
கவலையின்றி இருக்க
இயலாமையின் பொறாமை!

மனதார மன்னித்து விடு!
அவர்களையும்
பார்த்துச் சிரி!
புரிந்தாலும் ஒதுங்கிக் கொள்வர்!
புரியாவிட்டாலும் கூட!

இப்படியே
சில நாள் பயிற்சியில்
சிரிப்பு உனக்கு
கை கைகூடிவிடும்!
உன் பொறுப்புகளும்
வாழ்க்கைச் சுமையும்
உன்னை
தொந்தரவு செய்யாது!

சுதந்திரமாக உணர்வாய் நீ!
இப்போது இன்னும்
அதிக நேரம் சிரிக்கலாம் நீ!

அப்புறமென்ன
வந்துவிடு எங்களுடன்!
சேர்ந்து சிரிப்போம்!

நீ மறுத்தாலும்
நாங்கள்
காத்துக் கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!

- சுவாமி பித்தானந்தா,
கீழ்ப்பாக்கம்.
This entry was posted on 9:51 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On February 26, 2009 at 10:02 AM , Thekkikattan|தெகா said...

பித்ஸ்,

எத்தனை முறை படிச்சாலும் புச்சாவே இருக்குதப்பா... எப்பவும் இந்த சிரிப்பு மாத்திரை ஆட்களுக்கு தேவைப்பட்டுகிட்டே இருக்கும் :-)).

அந்த தேவை இருக்கிற வரைக்கும் வும்ம கவுஜா சுற்றிச் சுற்றி வரும் அப்படித்தானே ...

 
On February 26, 2009 at 9:10 PM , கவிதா | Kavitha said...

பித்து..ஜி !! நம்மை பார்த்து ஊர் சிரிக்காம இருந்தா சரி சுவாமிஜி..

 
On February 26, 2009 at 9:24 PM , Ungalranga said...

//கவிதா | Kavitha said...

பித்து..ஜி !! நம்மை பார்த்து ஊர் சிரிக்காம இருந்தா சரி சுவாமிஜி..
//
இதை நான் கண்டமேனிக்கு வழிமொழிகிறென்.....!!!

 
On February 26, 2009 at 9:33 PM , Ungalranga said...

//உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்!
தேஜஸ் கண்டு
உன் பின்னே கூட்டம்
வரக் கூடும்!//

நடந்து வருமா..
அல்லது
ஓடி வருமா(அடிக்க)
குருவே?

 
On February 26, 2009 at 9:35 PM , Ungalranga said...

//இப்படியே
சில நாள் பயிற்சியில்
சிரிப்பு உனக்கு
கை கைகூடிவிடும்!
உன் பொறுப்புகளும்
வாழ்க்கைச் சுமையும்
உன்னை
தொந்தரவு செய்யாது!//

பைத்தியங்களுக்கும் இது போன்ற தொந்தரவுகள் இல்லை என்று கேள்விப்பட்டேன்..
அப்படியா குருவே?

 
On February 26, 2009 at 10:40 PM , Lancelot said...

he he he sirippu police mathiri neenga sirippu saamiyar :P

 
On February 26, 2009 at 10:44 PM , சந்தனமுல்லை said...

:-)

சிரிப்பை பத்தி போஸ்ட்!!


//நீ மறுத்தாலும்
நாங்கள்
காத்துக் கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!//

ஏன் இந்தக் கொலவெறி!!

 
On February 26, 2009 at 10:52 PM , செ.முததமிழ்செல்வன் said...

இதுவரைக்கும் சிரிச்சுகிட்டுதான் இருந்தேன் இதை படிச்சதிலிருந்து - ஒரே அழுகையா வருது (ஆகா என்ன அருமையா பீல் பண்ணி எழுதிருக்கீங்கனு நெனச்சதால...)

- முத்தமிழ்செல்வன்.செ

 
On February 27, 2009 at 1:41 AM , Iyappan Krishnan said...

ரங்கன் said...

//
இதை நான்கண்ட மேனிக்கு வழிமொழிகிறென்.....! //

ரங்கா .. கண்டதெல்லாம் பப்ளிக்கா சொல்லப்பிடாது. அண்ணாமலை ரஜினி மாதிரி "கடவுளே கடவுளே" ன்னு சொல்லிட்டு போய்டனும்..

 
On February 27, 2009 at 3:39 AM , Ungalranga said...

//Jeeves said...

ரங்கன் said...

//
இதை நான்கண்ட மேனிக்கு வழிமொழிகிறென்.....! //

ரங்கா .. கண்டதெல்லாம் பப்ளிக்கா சொல்லப்பிடாது. அண்ணாமலை ரஜினி மாதிரி "கடவுளே கடவுளே" ன்னு சொல்லிட்டு போய்டனும்..//


உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது...கிகிகி..
அப்படிப்பட்ட அனுபவமும் எனக்கு தேவை இல்லை.. கிகிகி..

இனிமேலாச்சும்..ஹிஹிஹி பதிவு பத்தி மட்டும்.. ஹிஹி.. கமெண்ட் போடுங்க.. ஹிஹிஹி...

யாகவராயினும்.. ஹிஹிஹி.. நாகாக்க.. ஹாஹாஹா...

ஒரே சிப்பு சிப்பா வருது.. ஹாஹாஹா.....

 
On February 28, 2009 at 10:55 AM , Iyappan Krishnan said...

ரங்கன் said...

//Jeeves said...

ரங்கன் said...
//

Looks like you are disturbed and hurt by my comment and my apologies for the same.

//யாகவராயினும்.. ஹிஹிஹி.. நாகாக்க.. ஹாஹாஹா...

ஒரே சிப்பு சிப்பா வருது.. ஹாஹாஹா.....

//


will keep in mind. thanks for keeping me checked.

 
On March 2, 2009 at 11:59 PM , நாமக்கல் சிபி said...

என்ன நடக்குது இங்கே?
ஜாலியா சிரிக்கிறதை விட்டுட்டு!

சி.பி. தனமா? ராஸ்கல்ஸ்!

 
On March 19, 2009 at 3:21 PM , ஹேமா said...

//துன்பங்கள் வரும்போதும்
துவளாமல் சிரி!
உள்ளத்து விசனங்களை
வெளியிலே எறி!//

நீங்க சொல்லியிருக்கும் அத்தனை விசயங்களையும் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் மனம் விசனப்பட்டுக் கிடக்கும்போது சிரிப்பு எங்கே !

 
On April 13, 2009 at 7:04 AM , sakthi said...

இப்படியே
சில நாள் பயிற்சியில்
சிரிப்பு உனக்கு
கை கைகூடிவிடும்!
உன் பொறுப்புகளும்
வாழ்க்கைச் சுமையும்
உன்னை
தொந்தரவு செய்யாது!

appadingarenga sari try seythita poguthu

 
On July 1, 2009 at 10:58 PM , Prapa said...

பித்ஸ் சூப்பர்.

 
On July 3, 2009 at 6:02 AM , Admin said...

ரொம்பவே சிரிச்சிட்டமல்ல.....

 
On December 2, 2010 at 11:51 AM , அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Good one...